கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் மொஹமட் நௌஃபர் கைது

கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் மொஹமட் நௌஃபர் மொஹமட் அலி கைது 

by Staff Writer 23-02-2019 | 3:57 PM
Colombo (News 1st) துபாயில் கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் என கூறப்படும் மொஹமட் நௌஃபர் மொஹமட் அலி கொலன்னாவை - சாலமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நபர் மாளிகாவத்தையில் குடு சூட்டி எனும் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.