அரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் 185 முறைப்பாடுகள்

அரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் 185 முறைப்பாடுகள்

by Staff Writer 23-02-2019 | 4:48 PM
Colombo (News 1st) கடந்த நான்கு வருட காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இரண்டு வாரங்களுக்குள் 185 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 2015 ஜனவரி 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான 4 வருடங்களுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் செயற்பாடுகள், நிறுவன நம்பிக்கையை மோசடி செய்தல், முறையற்ற வளப் பாவனை தொடர்பில் மக்களின் முறைப்பாடுகளைப் பெற்று, அவை தொடர்பில் விசாரித்தல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொறுப்பாகும். எழுத்துமூல முறைப்பாடுகளை அல்லது தகவல்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் செயலாளர், அரச நிறுவன முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, அறை இலக்கம் 210, 2 ஆவது மாடி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், பெளத்தாலோக மாவத்தை, கொழும்பு 07 எனும் முகவரிக்கு சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாய்மொழி மூலம் தகவல்களைத் தெரிவிக்க 011-2665382 எனும் இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் மார்ச் மாதம் 07 ஆம் திதகி வரை முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.