by Staff Writer 22-02-2019 | 5:56 PM
Colombo (News 1st) ஜனநாயக மக்கள் முன்னணியில் புதிய நியமனங்கள் நேற்று (21) வழங்கப்பட்டன.
ஜனநாயக மக்கள் முன்னணியின் புதிய செயலாளர் நாயகமாக மேல் மாகாண சபை உறுப்பினர் கே.ரீ. குருசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் கட்சித் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு கூட்டத்தில் கட்சியின் புதிய பதவி மாற்றங்களும் நியமனங்களும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டன.
இதன் பிரகாரம், முன்னணியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேசன் தெரிவு
செய்யப்பட்டார்.
வட, கிழக்கு அமைப்பு செயலாளராக ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவு செய்யப்பட்டதுடன், அமைப்பு செயலாளராக சன் பிரபாகரன்
நியமிக்கப்பட்டார்.
கொழும்பு மாவட்ட அமைப்பாளராக பாலசுரேஷ் குமார் மருதப்பன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க பொதுச்செயலாளராக மூக்கன் சந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டார்.