கிளிநொச்சியில் இளைஞர் கொலை

கிளிநொச்சி இளைஞர் கொலை: குளத்தில் இருந்து சடலம் மீட்பு

by Staff Writer 22-02-2019 | 5:40 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று காலை தர்மபுரம் இரண்டாம் யூனியன் குளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. தர்மபுரம் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான அரசசிங்கம் கௌரியானந்தன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்று (21) காலை கூலித்தொழிலுக்கு சென்றதாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்துள்ளார். குறித்த நபர் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.