சியோல் அமைதிக்கான விருதைப் பெற்றுக்கொண்டார் நரேந்திர மோடி

சியோல் அமைதிக்கான விருதைப் பெற்றுக்கொண்டார் நரேந்திர மோடி

சியோல் அமைதிக்கான விருதைப் பெற்றுக்கொண்டார் நரேந்திர மோடி

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2019 | 5:15 pm

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சியோல் அமைதிக்கான விருது பெறும் 14 ஆவது நபர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

இதற்கு முன்னர் ஐ.நா முன்னாள் செயலாளர் நாயகம் கோஃபி அனான், ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் ஆகியோர் இந்த விருதை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஒக்டோபரில் பிரதமர் மோடிக்கு ‘சியோல் அமைதிப் பரிசு’ அறிவிக்கப்பட்டது.

”ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைத்தமைக்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியமைக்காகவும் இந்திய பிரதமர் மோடிக்கு 2018 ஆம் ஆண்டிற்கான சியோல் அமைதி விருது வழங்கப்படுவதாக தென்கொரியா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் வருடம் முதல் வழங்கப்படும் சியோல் அமைதி விருது, அதே வருடம் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்