இந்தியன் 2 படத்தில் நடிக்கும் ஆர்.ஜே. பாலாஜி

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் ஆர்.ஜே. பாலாஜி

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் ஆர்.ஜே. பாலாஜி

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2019 | 4:51 pm

கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆர்.ஜே. பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளார்.

கமல் ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் – ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18 ஆம் திகதி ஆரம்பமானது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’-இற்கான வசனங்களை எழுதியுள்ளனர்.

இப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்திற்கு அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரை ஷங்கர் அணுகியுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதுவரை யாருமே அக்கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

கமலுக்கு வில்லனாக நடிக்க அஜய் தேவ்கன் மறுத்துவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தனக்குப் பரிச்சயம் இல்லாத மொழிகளில் நடிப்பதில்லை என்பதால் அஜய் தேவ்கன் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க ஆர்.ஜே. பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வௌியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்