பெரிய கிண்ணியாவில் அனுமதியின்றி அகழப்பட்ட 15,000 கியூப் மணல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது

by Staff Writer 21-02-2019 | 7:02 PM
Colombo (News 1st) திருகோணமலை - பெரிய கிண்ணியா பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி அகழப்பட்ட சுமார் 15,000 கியூப் மணல் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. பெரிய கிண்ணியா பகுதியில் கிழக்கு கரையோரப் படையணியின் கடற்படையினர், பொலிஸார் , புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக உத்தியோகத்தர்களுடன் இணைந்து நேற்று (20) மேற்கொண்ட தேடுதலின்போது மகாவலி கங்கையை அண்மித்த பகுதியில் மணல் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸாரும் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். மணல் கடத்தலில் ஈடுபடும் கும்பல்களைத் தடுப்பதற்காக விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இதன்போது, மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்