வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2019 | 8:10 am

Colombo (News 1st) வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிக வேகத்துடன் பயணிப்பதனால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி, சிலாபம் – மஹாவெவ பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானத்தில் மூவர் உயிரிழந்தனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி மின்மாற்றி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியது.

இந்தச் சம்பவத்தில் பஸ் அதிக வேகத்தில் பயணித்தமையே விபத்துக்கான காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறையிட முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்