புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 21-02-2019 | 5:48 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். 02. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் 100 மில்லியன் ரூபா செலவில் புதிய மின்தூக்கிகளைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். 03. போதைப்பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது. 04. சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க தேசிய நிதியம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 05. மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை உத்தியோகப்பூர்வமாகக் கிடைக்காமையால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. கனடாவின் ஹலிபக்ஸ் (Halifax) நகரிலுள்ள வீடு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி, 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 02. புல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.