பங்களாதேஷ் தொடர்மாடிக் குடியிருப்பில் தீ: 78 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் தொடர்மாடிக் குடியிருப்பில் தீ: 78 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் தொடர்மாடிக் குடியிருப்பில் தீ: 78 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2019 | 8:50 am

Colombo (News 1st) UPDATE: பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாக,  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறிய அந்நாட்டு தீயணைப்புப் படையின் தலைமை அதிகாரி அலி அஹ்மட், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

டாக்காவிலுள்ள ஒரு பழைய கட்டடத் தொகுதியில் நேற்று மாலை நேரத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்