திருகோணமலையில் மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரத்தை மீள வழங்குவது குறித்து ஆய்வு

திருகோணமலையில் மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரத்தை மீள வழங்குவது குறித்து ஆய்வு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2019 | 2:23 pm

Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில் மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரத்தை மீண்டும் வழங்குவது தொடர்பில் அரச நிறுவனங்கள் சில ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த ஆய்வு நடவடிக்கைகள் கந்தளாய் – சூரியபுர பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆய்வு நடவடிக்கையில் மகாவலி அதிகார சபை, மத்திய சுற்றால் அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரம் கடந்த 15 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோதமாக முன்ணெடுக்கப்படுகின்ற மணல் அகழ்வைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்