ஜோர்தானிலுள்ள பணியாளர்களுக்கு 6 மாத கால பொதுமன்னிப்பு

ஜோர்தானிலுள்ள பணியாளர்களுக்கு 6 மாத கால பொதுமன்னிப்பு

ஜோர்தானிலுள்ள பணியாளர்களுக்கு 6 மாத கால பொதுமன்னிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2019 | 2:06 pm

Colombo (News 1st) ஜோர்தானில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பணியாளர்கள் சொந்த நாடுகளிற்குத் திரும்புவதற்காக 6 மாதங்கள் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இம் மாதம் முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஜோர்தானில் 3,500 இலங்கையர்கள் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாக, அந்நாட்டின் தூதுவராலயம் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குடிவரவு குடியகல்வு சட்டத்தின்படி, ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் பொது மன்னிப்பு காலத்தினுள் அவற்றை தீர்த்து பணியாளர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜோர்தானிலுள்ள தொழில் வழங்குநர்களின் கீழ் தொழில்புரிபவர்கள் குறிப்பிட்ட காலம் வரை வேலை செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஜோர்தானில் உறவினர்கள் தங்கியிருப்பார்களாயின் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்