முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு தொழிற்பயிற்சி

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு தொழிற்பயிற்சி

by Staff Writer 20-02-2019 | 1:47 PM
Colombo (News 1st) இவ்வருட இறுதிக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும் என, தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சாரதிகளின் சமூக, பொருளாதார மற்றும் தொழில் மட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 12 இலட்சம் பேர் முச்சக்கரவண்டி சாரதிகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் சேவைநேரம் 8 மணித்தியாலங்களாகக் காணப்படுகின்ற போதிலும், 6 மணிநேரம் அவர்கள் ஓய்வாகவே இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அந்த நேரத்தினை பிரயோசனப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்த புதிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.