பாடசாலைப் புத்தகங்கள் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

பாடசாலைப் புத்தகங்கள் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

பாடசாலைப் புத்தகங்கள் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2019 | 6:58 am

Colombo (News 1st) இலவசப் பாடசாலைப் புத்தகங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் இன்னமும் நிறைவுறவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பாடசாலைப் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படாமையால் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் இலவசப் பாடப்புத்தகங்கள் இன்னமும் பகிர்ந்தளகிக்கப்படவில்லை என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதமளவில் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் இன்னமும் விநியோகிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தில் செலவளிக்கப்படும் பாடப்புத்தகங்களை விநியோகிக்காமை மாணவர் ஆசியர்களுக்கு பாரிய பிரச்சினை எனவும் பாடசாலைப் புத்தகங்களை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொள்வதற்கான மாற்றீடு இல்லாத நிலையில் பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்காமை தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் விசனம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி வௌியீட்டுத் திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பாடசாலைப் புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறைவுற்றுள்ளதாக குறித்த பாடசாலைப் புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் பிரிவுக்கு பொறுப்பான பிரதி ஆணையாளர் லால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சுமார் 40 மில்லியன் புத்தகங்கள் இதுவரை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 3,800 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் லால் சந்திரசிறி மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்