இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2019 | 8:24 pm

Colombo (News 1st) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தேர்தல் இன்று நடைபெற்றது.

2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் 84 நிலையங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கெடுப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி மஹிந்த லொக்குகே ஆகியோர் இம்முறை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்