இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2019 | 7:05 am

Colombo (News 1st) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தேர்தல் இன்று (20) நடைபெறவுள்ளது.

2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே இவ்வாறு நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் 84 நிலையங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

இந்தத் தடவை, ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி மஹிந்த லொக்குகே ஆகியோர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

அதேநேரம், செயலாளர் பதவிக்காக, சட்டத்தரணிகளான கௌஷல்ய நவரத்ன மற்றும் சமன் வெலியங்க ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்