தெங்கு உற்பத்திகளால் 95 பில்லியன் ரூபா வருமானம்

தெங்கு தொழிற்துறை உற்பத்திகளால் 95 பில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்

by Staff Writer 19-02-2019 | 6:34 PM
Colombo (News 1st) கடந்த ஆண்டு தெங்கு தொழிற்துறை உற்பத்திகளால் 95 பில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருமானத்தை 2022 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உதய ரூபசிங்ஹ தெரிவித்தார். 2017, 2018 ஆம் ஆண்டுகளில் பயிர்ப்பற்றாக்குறை நிலவிய போதிலும், தெங்குசார் உற்பத்திகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைக் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் தெங்கு தொழிற்துறைகளின் உற்பத்திகளான சுத்தமான தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால், தேங்காய்ப் பால் மா ஆகியவற்றில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உதய ரூபசிங்ஹ சுட்டிக்காட்டினார்.