திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 19-02-2019 | 5:48 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. இரத்தினபுரி பகுதியில் இருவர் காணாமல்போனமை தொடர்பில், தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கபில நிஷாந்த டி சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 02. பதவிக் காலம் நிறைவடைந்துள்ள 6 மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 03. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும் 20 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். 04. கிங்சி வீதி சுற்றுவட்டத்தில் இருந்து கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 05. அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேராவிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அந்நாட்டின் குற்றவியல் திணைக்களம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக, சட்டத்தரணி ஷாப்திக வெல்லபிலி தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பில், அந்நாட்டு செனட்சபை உறுப்பினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 02. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணி சரியானது என, சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 02. கிறிஸ் கெய்ல் எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 03. பங்களாதேஷின் கிரிக்கெட் வீரர் மஹமதுல்லாஹ் மற்றும் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.