ட்ரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

ட்ரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க மாநிலங்கள் சட்ட நடவடிக்கை

by Chandrasekaram Chandravadani 19-02-2019 | 12:49 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக 16 மாநிலங்களின் கூட்டணி சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொலொராடோ (Colorado), கொனெக்டிகட் (Connecticut), தெலவெயா (Delaware), ஹவாய் (Hawaii), இல்லினொய்ஸ் (Illinois), மைன் (Maine), மேலிலேண்ட் (Maryland), மின்னெசோடா (Minnesota), நெவாடா (Nevada), நியூ ஜேர்ஸி (New Jerse), நியூ மெக்ஸிகோ (New Mexico), நியூயோர்க் (New York), ஒரேகொன் (Oregon), வேர்ஜீனியா (Virginia) மற்றும் மிச்சிகன் (Michigan) ஆகிய 15 மாநிலங்களும் கலிபோர்னியா மாநிலத்தைத் தலைமையாகக் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லைச்சுவரை அமைப்பதற்கான நிதியை காங்கிரஸின் அனுமதியின்றிப் பெற்றுக்கொள்வதற்காக ட்ரம்ப் இந்த அவசரகால நிலையைப் பிரகடனம் செய்திருந்தார். இதற்கு எதிராக கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதி மாவட்டமொன்றின் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, அவசரகால நிலைக்கு எதிராகக் காணப்படும் அனைத்து வழிகளையும் பயன்படுத்திப் போராட வேண்டும் என ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில், ஜனாதிபதி ட்ரம்பை நீதிமன்றத்துக்குக் கொண்டுவருவோம் என, கலிபோர்னிய மாநில சட்டமா அதிபர் சேவியர் பெக்கெர்ரா சூளுரைத்துள்ளார்.