பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் பலி தீர்த்தல் தொடர்கிறது

பலஸ்தீன அதிகார சபையிடம் இருந்து 5 வீத வரியை விதிக்க இஸ்ரேல் தீர்மானம்

by Fazlullah Mubarak 18-02-2019 | 8:03 AM

சிறையிலுள்ள பலஸ்தீனியர்களுக்காக உதவித்திட்டங்களை வழங்கும் பலஸ்தீன அதிகார சபையிடமிருந்து 5 வீத வரியை விதிக்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.

இஸ்ரேல் சிறையிலுள்ள பலஸ்தீனியர்களின் நலன்கருதி செயற்பட்டுவரும் பலஸ்தீன அதிகார சபையின் குறித்த உதவித் திட்டங்களுக்கே இவ்வாறு 5 வீத வரி அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் இதனைத் ரெிவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்கா நிறைவேற்றிய இது போன்றவொரு சட்டத்திற்கு இணைவாக இந்த தீர்மானம் வௌியாகின்றமை குறிப்பிடத்தக்கது. இடைக்கால சமாதான உடன்படிக்கைகளின் பின்னர், சிறையிலுள்ள பலஸ்தீனர்களுக்காக குறித்த அதிகாரசபை 222 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒரு மாதத்திற்கு ஒதுக்குகின்றது. 2014 முதல் இடைக்கால சமாதான உடன்படிக்கைகள் முடங்கியிருப்பதால் இஸ்ரேலின் மற்றுமோர் நடவடிக்கையாக இதனை கருத இயலும். பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்காவிடமிருந்து அதிலும் ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டபோதிலும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் குடும்பங்களுக்கு உதவி வருகின்றார். ஷஹீதாக்கப்பட்ட மற்றும் சிறைவைக்கப்பட்ட பலஸ்தீனர்கள் ஒரு தேசிய போராட்டத்தின் "ஹீரோக்கள்" என அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. எவ்வாறாயினும், காஸா எல்லையில் தொடர்ந்தும் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.