சிலாபத்தில் விபத்தில் சிக்கிய நால்வர் பலி

சிலாபத்தில் விபத்தில் சிக்கிய நால்வர் பலி

by Fazlullah Mubarak 18-02-2019 | 7:42 AM

சிலாபம் - மஹவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி மின்மாற்றி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதுடன், மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.