சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆசியா விஜயம்

சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆசியா விஜயம்

by Fazlullah Mubarak 18-02-2019 | 8:07 AM

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.

இளவரசர் முஹம்மத் பின் சல்மான் நேற்றிரவு பாகிஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ராவல்பிண்டியை சென்றடைந்த இளவரசரை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வரவேற்றார். சவூதி இளவரசரின் இந்த விஜயத்தின்போது பாகிஸ்தானுடன் 20 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகையிலான முதலீட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நிதிநெருக்கடியைத் தீர்ப்பதற்காக 6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை சௌதி அரேபியா முன்னர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் நாளைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.