அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணி சரியானது - ICC

அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணி சரியானது - சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு

by Staff Writer 18-02-2019 | 9:33 PM
Colombo (News 1st) இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணி சரியானது என, சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி​யை லசித் மலிங்க வழிநடத்தவுள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று (18) மாலை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் லசித் மலிங்க தலைவராகவும் நிரோஷன் திக்வெல்ல உபதலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர். அவிஷ்க பெர்னாண்டோ, ஏஞ்சலோ பெரேரா, பியமால் பெரேரா, ஓசத பெர்னாண்டோ ஆகி​யோருக்கும் இலங்கை குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. உபுல் தரங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, திஸ்ஸர பெரேரா, கமிந்து மென்டிஸ், இசுரு உதான, விஷ்வ பெர்னாண்டோ கசுன் ராஜித்த ஆகி​யோர் இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள ஏனைய வீரர்களாவர். இதேவேளை, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியானது சரியானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில், அகில தனஞ்சயவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.