மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2019 | 8:38 pm

Colombo (News 1st) பதவிக் காலம் நிறைவடைந்துள்ள 6 மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் இன்று (18) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி பீ. தொலவத்த இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு, சப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அதன் உறுப்பினர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மாகாண சபை எல்லை நிர்ணயத்தை சுட்டிக்காட்டி தேர்தல் பிற்போடப்பட்டாலும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டினால் மக்களின் வாக்குரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்