பியகமயில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

பியகமயில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

by Staff Writer 17-02-2019 | 10:24 AM
Colombo (News 1st) பியகம - பேரகஸ்ஹந்திய பகுதியில் 4 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 35, ஆயிரம் ரூபா நாணயத்தாள்களும் 300, ஆயிரம் ரூபா நாணயத் தாள்களும் 165, ஐந்நூறு ரூபா நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மள்வானை பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே போலி நாணயத்தாள்களுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹர நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.