by Staff Writer 17-02-2019 | 7:10 AM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 1,75,000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 3,50,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான இந்தக் கொடுப்பனவு 1,50,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு 24,000 ரூபா வழங்கப்பட்டது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கான இலவச தபால் கொடுப்பனவு 48,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.