அழிவடைந்த சோள அறுவடையை கொள்வனவு செய்ய நடவடிக்கை

படைப்புழுவினால் அழிவடைந்த சோள அறுவடையை கொள்வனவு செய்ய நடவடிக்கை

by Staff Writer 17-02-2019 | 11:05 AM
Colombo (News 1st) படைப்புழுவினால் அழிவடைந்த சோள அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கு, கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கால்நடைகளுக்கு உணவாக வழங்கும் நோக்கில் இந்த சோளம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. அடுத்த வாரமளவில் இதற்கான வி​லை நிர்ணயிக்கப்படும் என, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், டொக்டர் நிஹால் வெதசிங்க தெரிவித்துள்ளார். தமது திட்டம் குறித்து விவசாயத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் காலங்களிலும் படைப்புழுவினால் சோளச் செய்கைக்கு பாதிப்பு ஏற்படுமாயின், அழிவடையும் சோளத்தை கால்நடைகளுக்கு வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.