நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 17-02-2019 | 2:22 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் மின்னல் தாக்கங்களிலிருந்து மக்கள் அவதானமாக செயற்படுமாறும் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.