IMF பிரதிநிதிகள் - மங்கள சமரவீர இடையே சந்திப்பு

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் - அமைச்சர் மங்கள சமரவீர இடையே சந்திப்பு

by Staff Writer 17-02-2019 | 7:54 AM
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் இன்று (17) சந்திப்பு இடம்பெறவுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குத் தௌிவுபடுத்தவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 2 வாரங்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், கடந்த வியாழக்கிழமை நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.