by Bella Dalima 16-02-2019 | 4:39 PM
அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லைச்சுவரை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை காங்கிரஸின் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளும் நோக்கில், நாட்டில் அவசரகால நிலையை அமெரிக்க ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார்.
தமது 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்த எல்லைச்சுவரை நிர்மாணித்து, நாட்டிற்குள் அத்துமீறி நுழையும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
இந்த அவசரகால நிலை பிரகடனமானது அமெரிக்க அரசியலமைப்பைக் கேள்விக்குட்படுத்துவதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நீதிக்குழு, இந்த பிரகடனம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் எல்லைச்சுவருக்கான நிதியினை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படாததால் 35 நாட்கள் பணி முடக்கம் நீடித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.