சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டாராக T.லோகவியாசன் தெரிவு

சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டாராக மட்டக்களப்பைச் சேர்ந்த T.லோகவியாசன் தெரிவு

by Staff Writer 16-02-2019 | 9:52 PM
Colombo (News 1st) சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 04-இன் வெற்றியாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த T.லோகவியாசன் தெரிவானார். திருகோணமலையைச் சேர்ந்த யு.லாவன்யா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வத்தளையைச் சேர்ந்த பி.இஷிதா மூன்றாம் இடத்தைப் பெற்றார். சக்தி ஜூனியர் சூப்பர்ஸ்டார் சீசன் 04 -இன் இறுதிச்சுற்றுப் போட்டி இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் இன்று இடம்பெற்றது. கொழும்பைச் சேர்ந்த பி.யுகேந்திரன், ஹப்புத்தளையைச் சேர்ந்த எஸ்.ரஷிகா, ஹட்டனைச் சேர்ந்த ஆர்.வக்ஷயா காயத்திரி, கொழும்பைச் சேர்ந்த எஸ். ஆதிஸ் ஆகியோரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டனர். மேலும், ஹட்டனைச் சேர்ந்த எம்.தனுஷிகா, கிளிநொச்சியை சேர்ந்த யூ.கோபிகா, பண்டாரவளையைச் சேர்ந்த எஸ். அஞ்சலி ஆகியோரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டனர்.