இலங்கையில் கிராம மக்களின் வறுமை குறைந்து வருகிறது

இலங்கையில் கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது: உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர்

by Staff Writer 16-02-2019 | 3:33 PM
Colombo (News 1st) நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் இலங்கையில் கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருவதாக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் கலாநிதி Hartwig Schafer பாராட்டுத் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு வருகை தந்துள்ள கலாநிதி Hartwig Schafer  ஜனாதிபதியை நேற்று (15) மாலை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தார். இலங்கை அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதை உலக வங்கி அடையாளங்கண்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனிநபர் ஒருவரின் வருமானம் 4000 டொலராக அமைந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் எனவும் கலாநிதி Hartwig Schafer கூறியுள்ளார். இதேவேளை, நாட்டின் குளங்களை புனரமைப்பதற்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் முன்வைத்ததுடன், அதற்கு உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 10,000 குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2400 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.