முல்லைத்தீவிற்கு பிரதமர் விஜயம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவிற்கு பிரதமர் விஜயம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2019 | 7:16 pm

Colombo (News 1st) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்ல முயன்ற போது, அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

எனினும், தாம் பிரதமரை வரவேற்பதற்காக அங்கு வரவில்லை எனவும் தமது பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே பிரதமர் வரும் வழியில் தாம் நிற்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்