நைஜீரியாவில் 66 பேரின் சடலங்கள் மீட்பு

நைஜீரியாவில் 22 குழந்தைகள் உள்ளிட்ட 66 பேரின் சடலங்கள் மீட்பு

by Bella Dalima 16-02-2019 | 4:29 PM
நைஜீரியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் 66 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்களின் சடலங்களும் அடங்குவதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களால் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். இன்றைய தினம் நைஜீரியாவில் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், இவ்வாறு மனித உடல்கள் மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் கதுனா மாகாணத்திலுள்ள 8 வெவ்வேறு கிராமங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நைஜீரியாவில் நடைபெறவிருந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் ஒருவார காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆரம்பமாவதற்கு 5 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, நைஜீரியாவின் சுயாதீன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து,  23 ஆம் திகதிக்கு தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளன.