இதயத்திற்கு இதயம் நிதியத்திற்கான இணையத்தளம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

இதயத்திற்கு இதயம் நிதியத்திற்கான இணையத்தளம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Bella Dalima

16 Feb, 2019 | 7:36 pm

Colombo (News 1st) இதயத்திற்கு இதயம் நிதியத்திற்கான இணையத்தளம் இன்று உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் இருதய நோய் பயிற்சி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதயத்திற்கு இதயம் நிதியம் தொடர்பான தகவல்களை இந்த இணையத்தளமூடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை இந்த இணையத்தளமூடாக சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதயத்திற்கு இதயம் நிதியத்திற்கு நன்கொடையாளர்களின் நன்கொடைகளும் இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நோயாளர்களைத் தெரிவு செய்யும்போது அவர்களின் பொருளாதார நிலைமை தொடர்பில் உரிய தகவல்களைப் பெற்று தெரிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.

மேலும், இதயத்திற்கு இதயம் நிதியத்திற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25 இலட்சம் ரூபாவும் பொலன்னறுவை பௌத்த சங்க நிதியத்திலிருந்து 25 இலட்சம் ரூபாவும் நன்கொடையாக வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்