மரண தண்டனைக்கு கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு

மரண தண்டனைக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு

by Staff Writer 15-02-2019 | 8:27 PM

Colombo (News 1st) 

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் போதனைகளுக்கு அமைய, எந்தவொரு காரணத்திற்காகவும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், போதைப்பொருளை ஒழிப்பதற்கு கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கான நியாயமான செயற்பாடொன்றை அனைவரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 14 ஆயர்கள் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.