மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்கள் பரிசோதனை

திருமலையில் விநியோகிக்கப்பட்டுள்ள மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை பரிசோதிக்க விசேட குழு 

by Staff Writer 15-02-2019 | 3:54 PM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை பரிசோதிப்பதற்கு கொழும்பிலிருந்து விசேட குழுவொன்றை அனுப்ப புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தீர்மானித்துள்ளது. குறித்த குழு மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரங்களிலுள்ள விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திர விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறையற்ற விதத்தில் மணல் அகழ்வதால், திருகோணமலை மாவட்டத்தை சூழவுள்ள கரையோரங்களில் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்