இரண்டு வாரங்களில் நாட்டில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்: ஜனாதிபதி

by Bella Dalima 15-02-2019 | 7:27 PM
Colombo (News 1st) இரண்டு வாரங்களில் நாட்டில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மனைவியைத் தாக்குகின்றனர். பொருட்களை நிலத்தில் வீசுகின்றனர். நோய்வாய்ப்படுகின்றனர். இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது. பிச்சைக்காரர்களாக மாறுகின்றனர். இது தவறு என அவர்கள் அறிவார்கள். எனினும், தவறான விடயங்களை செய்து அழிந்து போகின்றனர்
என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மதுவற்ற கிராமங்களை உருவாக்கத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரகல மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டட திறப்பு விழா நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். மகாவலி C வலயத்தின் திம்புலாகல - நுவரகல மகா வித்தியாலய மைதானத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.