by Staff Writer 15-02-2019 | 4:24 PM
Colombo (News 1st) பொலன்னறுவை - அரலங்கவில பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வனப்பாதுகாப்பு அலுவலகத்தில் கடமையாற்றும் 40 வயதான அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெலும்வெவ வனப்பகுதியில் காட்டு யானைகளைத் துரத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.