சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு துரித நிவாரணம்

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு துரித நிவாரணம்

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு துரித நிவாரணம்

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2019 | 4:33 pm

Colombo (News 1st) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் பெறப்பட்டுள்ள கடனுக்கான தவணைக் கட்டணத்தை செலுத்துவதில் சிரமங்கள் நிலவுகின்றமை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான போதுமான வளம் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக அரிசி உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களைத் தவிர்த்து அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைவாக, மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் அங்கத்துவம் வகிக்கும் ஆலை உரிமையாளர் ஊடாக விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நிதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்