by Staff Writer 15-02-2019 | 4:15 PM
Colombo (News 1st) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் கல்வி கற்கும் 54 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
54 மாணவர்களுக்கும் ஒரு வாரத்திற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார்.
புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் காரணமாகவே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
வகுப்புத்தடை விதிக்கப்பட்டவர்களில் மாணவிகளும் அடங்குவதாக துணை வேந்தர் குறிப்பிட்டார்.
குறித்த மாணவர்கள் தொடர்பில் பீடாதிபதிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியமையானது, அது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் ஷாந்த குறிப்பிட்டார்.