காணாமற்போன வர்த்தகர்கள் இருவர் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

காணாமற்போன வர்த்தகர்கள் இருவர் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2019 | 8:54 pm

Colombo (News 1st) புஸ்ஸ – ரத்ன உதாகம பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் காணாமற்போனமை தொடர்பில் அவர்களின் உறவினர்கள் பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

புஸ்ஸ – ரத்ன உதாகம பகுதியைச் சேர்ந்த மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் சிந்தக்க ஆகிய இரண்டு வர்த்தகர்கள் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளனர்.

தமது வீட்டில் இருந்த போது இருவரையும் பொலிஸாரே அழைத்துச் சென்றதாக மஞ்சுள அசேலவின் மனைவி குறிப்பிட்டார்.

காணாமற்போன இருவர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சென்று தாம் விசாரித்த போது, அவர்களை ஒப்படைப்பதாகக் கூறியதாக ரஷீத் சிந்தகவின் தாய் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், அவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

அதற்கமைய, கடந்த 13 ஆம் திகதி முதல் இது தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்