அறிமுகப் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய

அறிமுகப் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய

அறிமுகப் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2019 | 9:19 pm

Colombo (News 1st) அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய நான்காவது இலங்கையராக லசித் அம்புல்தெனிய பதிவானார்.

தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த இலக்கை அடைந்ததுடன், 304 ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

டேர்பனில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா 245 ஓட்டங்களையும், இலங்கை 191 ஓட்டங்களையும் பெற்றன.

மூன்றாம் நாளான இன்று 4 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களுடன் தென்னாபிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

அணித்தலைவர் ஃபெப் டு பிலெசிஸ் 25 ஓட்டங்களுடனும், குவின்டன் டி கொக் 15 ஓட்டங்களுடன் களமிறங்கினர்.

அடுத்தடுத்து அரைச்சதமடித்த இவர்கள் ஐந்தாம் விக்கெட்டிற்காக 96 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

குவின்டன் டி கொக் 55 ஓட்டங்களையும், ஃபெப் டு பிலெசிஸ் 90 ஓட்டங்களையும் பெற்றனர்.

தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 259 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

பந்து வீச்சில் லசித் அம்புல்தெனிய 5 விக்கெட்களையும், விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

304 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை சார்பாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஜோடி முதல் விக்கெட்டிற்காக 42 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

லஹிரு திரிமான்ன 21 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரத்ன 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

குசல் மென்டிஸினால் ஓர் ஓட்டத்தைக்கூட பெற முடியவில்லை. 10 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்