அங்கம் ஹட்டன ஆவணத் திரைப்படம் வௌியீடு

by Staff Writer 14-02-2019 | 8:46 PM
Colombo (News 1st) அங்கம் ஹட்டன ஆவணத் திரைப்படம் நேற்று (13) வௌியிட்டு வைக்கப்பட்டது. திரைப்படத்தின் விசேட காட்சி நேற்று தேசிய திரைப்பட கூட்டுத்தாபன தரங்கணி திரையரங்கில் திரையிடப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக கையாளப்பட்ட பாரம்பரிய சண்டைக் கலையை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்துவதற்காக இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அருண ஜயவர்தன இந்த திரைப்படத்தின் இயக்குனராவார். Sri Lanka's Got Talent சாம்பியன் பட்டத்தை வென்ற அஜந்த மஹந்த ஆராய்ச்சி உள்ளிட்ட இலங்கை விமானப்படையின் குழுவினர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். அஜந்த மஹந்த ஆராய்ச்சி 'அங்கம் பொர' கலையில் வளர்ச்சி கண்ட விதத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. திரைப்பட வௌியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.