English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
14 Feb, 2019 | 4:43 pm
காதலர் தினமான இன்று நடிகை சாயிஷாவுக்கு திருமண வாழ்த்துக்கூறி திருமண அறிவிப்பை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-இல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது.
கடந்த வருடம் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தெரிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்தும் படங்களில் நடித்தார். அவரின் பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆர்யாவிற்கும் நடிகை சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.
இந்த நிலையில், காதலர் தினமான இன்று சாயிஷாவுடனான தனது காதலை வெளிப்படுத்திய ஆர்யா, தனது திருமண அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில் இரு வீட்டாரது ஆசீர்வாதத்துடன் மார்ச்சில் சாயிஷாவை கரம்பிடிப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.
10 Dec, 2019 | 03:16 PM
04 Jul, 2018 | 05:46 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS