கடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி காயம் 

கடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி காயம் 

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2019 | 6:07 pm

Colombo (News 1st) கடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

கடவத்தை நகரில் முச்சக்கரவண்டியொன்றில் நபர் ஒருவர் ஹெரோயின் வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.

முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கடவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வர தயாரான சந்தர்ப்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸ் அதிகாரியிடமிருந்த துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதால் அவரின் கையில் காயமேற்பட்டுள்ளது.

காயமடைந்த பொலிஸ் அதிகாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் வசமிருந்த 10 கிராம் நிறையுடைய ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபரின் தாயார், மனைவி மற்றும் பிள்ளைகளும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்