ஜனாதிபதியின் யோசனை தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

மாகாண சபைத் தேர்தல் குறித்த ஜனாதிபதியின் யோசனை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடாத்த அமைச்சரவையில் தீர்மானம்

by Staff Writer 13-02-2019 | 2:25 PM
Colombo (News 1st) அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தல்களை எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நடாத்துவதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனை தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடாத்தி தீர்மானங்களை மேற்கொள்ள அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்குள் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடாத்தப்படவுள்ளது. ஜனாதிபதி இரு தினங்களுக்கு முன்னர் அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களும் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விருப்புவாக்கு முறைமையின் கீழ் நடாத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரேநாளில் நடாத்துவதாயின், பதவிக்காலம் நிறைவடையாத மாகாண சபைகளைக் கலைப்பதற்கு மாகாண முதலமைச்சர்களின் விருப்பத்தை அறிவதற்கான கடிதங்களைப் பெறவேண்டியுள்ளது. அத்தோடு, பழைய முறையின் கீழ் தேர்தலை நடாத்துவதற்கு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.      

ஏனைய செய்திகள்