குருநாகலில் பிரதமர் வருகை தந்த வீதியை மறித்து மக்கள் எதிர்ப்பு

by Staff Writer 13-02-2019 | 8:10 PM
Colombo (News 1st) அண்மித்த பாடசாலை - சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குருநாகல் விஷ்வோதா தேசிய பாடசாலை பிரதமர் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் வருகை தந்த வீதியை மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு அருகிலுள்ள பிரதேசங்களின் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படாமைக்கு இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் பிரதமர் உள்ளிட்ட பிரதம விருந்தினர்கள் நிகழ்வு இடம்பெறும் வளாகத்திற்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டதுடன், வீதியை திறக்க பொலிஸார் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். சிரமத்திற்கு மத்தியில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு செல்வதற்காக வீதி திறக்கப்பட்டதுடன், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.