by Staff Writer 13-02-2019 | 8:00 AM
Colombo (News 1st) தரமற்ற தலைகவசங்களின் இறக்குமதி தடை செய்யப்படும் என, போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார்சைக்கிள் விபத்துக்களாகவே பதிவாகுவதாகத் தெரிவித்துள்ள போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இதன்போது உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்குத் தரமற்ற தலைக்கவசங்களே காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.