ஆக்‌ஷன் ஹீரோயினாகும் த்ரிஷா

ஆக்‌ஷன் ஹீரோயினாகும் த்ரிஷா

ஆக்‌ஷன் ஹீரோயினாகும் த்ரிஷா

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2019 | 5:16 pm

Colombo (News 1st) ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘எங்கேயும் எப்போதும்’. ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவானது.

இந்த படத்தை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் ஆகிய படங்களை இயக்கினார். அந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார்.

இடையே விபத்து ஏற்பட்டதால், சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பியுள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை ஒன்றை எழுதி உள்ளார். அந்த கதையில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார்.

தற்போது த்ரிஷாவுடன் நடிக்க உள்ளவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருக்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்